டி20 உலகக் கோப்பை அணியில் மாற்றம்?
தனஞ்சய டி சில்வா வெளியே – கமிந்து மெண்டிஸ் மீண்டும் அழைப்பு இலங்கை அணியின் சமீபத்திய பேட்டிங் தோல்விகளைத் தொடர்ந்து, தனஞ்சய டி சில்வாவை அணியிலிருந்து நீக்க இலங்கை தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் மீண்டும் ஒரு மந்தமான பேட்டிங் ஆட்டமே இந்த முடிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது. அதேவேளை, கமிந்து மெண்டிஸை மீண்டும் அணியில் இணைக்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய டி20 தொடர் நெருங்கி வரும் நிலையில், அணியை விரைவாக உறுதி செய்யும் முயற்சியாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது. எனினும், இலங்கை கிரிக்கெட் (SLC) தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை இந்நிலையில், ICC ஆண்கள் டி20 உலகக் கோப்பை அணிப் பட்டியலை சமர்ப்பிக்கும் இறுதி நாள் சனிக்கிழமை (ஜனவரி 31) என்பதால், இன்று அல்லது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CFNews