Posts

Showing posts from September, 2026

ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

Image
WORLD NEWS ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்க முயன்றதற்குப் பதிலடியாக, ஈரானுக்குச் சொந்தமான ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே ஒரு கப்பலும் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டன. இந்த ஐந்து கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கு நிதியளிக்கும் பில்லியன் டொலர் ‘நிழல் வலையமைப்பின்’  ஒரு பகுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் 20 ஏவுகணைகளை வீசியது. எனினும், அதில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் அறிவித்துள்ளது. ஈரான் நடத்திய பொலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தடுத்ததாகவும், இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள்...