டி20 கிரிக்கெட் - நான்கு அமெரிக்க வீரர்களுக்கு விசா மறுப்பு
டி20 கிரிக்கெட் - நான்கு அமெரிக்க வீரர்களுக்கு விசா மறுப்பு
14 January 2026 | sindu
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 8ஆம் திகதி வரையில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இப் போட்டியில் 20 அணிகள் விளையாடும் நிலையில், அமெரிக்கா இன்னும் வீரர்களைத் தெரிவு செய்யவில்லை.
இந்நிலையில் அமெரிக்க அணியில் விளையாடும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் ஆகிய 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா அணியை தெரிவு செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளது.
இந்த விசா விவகாரத்தால், இங்கிலாந்து. ஜிம்பாப்பே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா ஆகிய நாடுகளிலும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Sportsnews

Comments
Post a Comment