Posts

Showing posts from February, 2026

பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Image
 பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதற்குப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அனுமதி அளித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாவுடன் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தொலைபேசியில் உரையாடினார்.  இலங்கை ஜனாதிபதி, இந்தச் சிக்கலுக்கு சுமுகத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்தார். கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைப் பாதுகாக்கவும், அதன் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்புடன், "மென் இன் கிரீன்" (Men in Green) என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் அணிக்கும் பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த விளையாட்டு உணர்வுடனும், தேசப் பெருமையுடனும் களமிறங்கி உலக அரங்கில் வெற்றி பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா உடன் விளையாட 3 நிபந்தனைகளை சொன்ன பாகிஸ்தான்!

Image
 இந்தியா உடன் விளையாட 3 கண்டிஷன் சொன்ன பாகிஸ்தான்! இந்திய அணியுடன் விளையாடும் வகையில் பாகிஸ்தான் அணியை சமாதானப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது.  எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அணி அறிவித்திருந்தது. இதற்கு அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதி மறுத்துள்ளதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.  இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 1,300 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு தாங்கள் ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்தப் புறக்கணிப்பால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.  பாகிஸ்தான் இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும். இது பாகிஸ்தான் அணியின் அ...

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு, அந்நாட்டு கிரிக்கெட்டிற்கு நீண்டகால ரீதியில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்துள்ளது.

Image
 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு, அந்நாட்டு கிரிக்கெட்டிற்கு நீண்டகால ரீதியில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்துள்ளது. வங்கதேச அணியை உலகக் கோப்பையிலிருந்து நீக்கிய ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.  பாகிஸ்தானின் இந்த 'தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு' (Selective Participation) என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஐசிசி, இது உலகளாவிய விளையாட்டு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முடிவினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடுமையான பொருளாதாரத் தடைகளையும் சட்ட ரீதியான சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, ஐசிசி-யிடமிருந்து பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய வருடாந்திர நிதிப் பங்கான சுமார் 34.5 மில்லியன் டாலர்கள் நிறு...

பாகிஸ்தான் அணி பங்கேற்கும் இந்தியாவுடன் மோதாது - பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81 Share Post FaceBook X What'sApp Viber Telegram Messenger 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண டி20 தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Image
  பாகிஸ்தான் அணி பங்கேற்கும் இந்தியாவுடன் மோதாது - பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு Share Post 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண டி20 தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.   இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.   இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பெப்ரவரி 15ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த லீக் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி களமிறங்காது என்று அந்நாட்டு அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ 'X' தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளது.   பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் மறுத்ததையடுத்து, அந்த அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டது.   இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தியாவுக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.   இது தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ...