2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில், பிப்ரவரி 15 அன்று கொழும்புவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணித்தால், ஐசிசி
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில், பிப்ரவரி 15 அன்று கொழும்புவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணித்தால், ஐசிசி மற்றும் பிசிசிஐ-க்கு சுமார் $20 முதல் $35 மில்லியன் வரை நேரடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயின் மதிப்பில் சுமார் 600 கோடி முதல் 1000 கோடி ரூபாய் வரையிலான பெரும் தொகையாகும்.
வங்கதேச அணி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தால், அதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய வருடாந்திர நிதிப் பங்கீட்டை ($34.5 மில்லியன்) நிறுத்தி வைக்கவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. கிரிக்கெட் உலகின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாகத் திகழும் இந்த மோதல் தவிர்க்கப்பட்டால், அது சர்வதேச கிரிக்கெட் சந்தையில் ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
#CFNews

Comments
Post a Comment