BREAKING NEWS: சவூதியில் உள்ள அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ள பகுதியில் ஏவுகணை எச்சரிக்கை!
BREAKING NEWS: சவூதியில் உள்ள அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ள பகுதியில் ஏவுகணை எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டுள்ள நிலையில், சவூதி அரேபியாவின் அல்-கார்ஜ் (Al Kharj) பிராந்தியத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென ஏவுகணை எச்சரிக்கை அபாயச் சங்குகள் (Sirens) ஒலிக்கவிடப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் 'பிரின்ஸ் சுல்தான்' விமானத் தளம் (Prince Sultan Air Base) இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கையை மீறி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், தற்போதைய ஆபத்து நீங்கிவிட்டதாக சவூதி சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களை ஈரான் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment