தெல்தெனியாவில் பெண்ணின் சடலம் மீட்பு.!!

 தெல்தெனியாவில் பெண்ணின் சடலம் மீட்பு.!!


கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – திகன, ரஜவெல்ல பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம மரணச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் பின்புற இருக்கையில் 36 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்த பெண் அக்குரணை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த சில மாதங்களாக திகன பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நேற்று (17) மாலை காருக்குள் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, உடனடியாக தெல்தெனிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.





சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெண்ணின் 41 வயதுடைய கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.


ஆரம்ப தகவல்களின் படி, கணவன் – மனைவி இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்ததாகவும், அதுவே இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இருப்பினும், பெண்ணின் மரணம் கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


உயிரிழந்த பெண்ணின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், உடற்கூறாய்வு அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெல்தெனிய பொலிஸார், குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் இணைந்து சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்த மர்ம மரணத்தின் உண்மை என்ன? குடும்பத் தகராறா? அல்லது வேறு ஏதேனும் பின்னணியா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!