அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருக்கும் – நெதன்யாகு
அமைதி ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இஸ்ரேல் எச்சரிக்கையுடன் இருக்கும் – நெதன்யாகு
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது. அது இன்றோ அல்லது என்றோ ஒருநாளோ நடக்காது.
நான் இஸ்ரேல் பிரதமராக இருக்கும் வரை அது நிகழாது. எங்கள் அமெரிக்கக் கூட்டாளிகளுடன் இணைந்து, இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்.
அணுசக்தி விஞ்ஞானிகளை இலக்கு வைத்தோம், பயங்கரவாத ஆட்சியின் தலைவர்களை ஒழித்தோம், அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அத்துடன் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறன்களையும் அழித்தோம்.
இதில் மிக முக்கியமான சாதனை என்ன வென்றால், அணு ஆயுதங்கள் அச்சுறுத்தலை நாங்கள் அகற்றியதே ஆகும். அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

Comments
Post a Comment