இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு!
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச்சை முடிக்கத் தவறியதற்காக இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அபராதம் விதித்துள்ளது.
போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் அளித்த அறிக்கையின்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக பந்துவீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், இலங்கை அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வீரர்களின் தனிப்பட்ட போட்டிக் கட்டணத்தில் இருந்து 5% அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SLvWI #SriLankaCricket #ICC #SportsMedia

Comments
Post a Comment