பாகிஸ்தான் அணி பங்கேற்கும் இந்தியாவுடன் மோதாது - பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81 Share Post FaceBook X What'sApp Viber Telegram Messenger 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண டி20 தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி பங்கேற்கும் இந்தியாவுடன் மோதாது - பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ண டி20 தொடரில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் அணி அதிகாரப்பூர்வமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், பெப்ரவரி 15ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருந்த லீக் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் அணி களமிறங்காது என்று அந்நாட்டு அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ 'X' தளத்தில் அதிரடியாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் மறுத்ததையடுத்து, அந்த அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி, சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தியாவுக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் ஆலோசனையில் ஈடுபட்ட நக்வி, தற்போது இந்த இறுதி முடிவை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் குழு A பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், தனது லீக் ஆட்டங்கள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடவுள்ளது.
இதன்படி பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள தமது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதற்கான தெளிவான காரணத்தைப் பாகிஸ்தான் அரசாங்கம் குறிப்பிடவில்லை.
இந்த முடிவின் மூலம், அந்தப் போட்டிக்கான 2 புள்ளிகளைப் பாகிஸ்தான் அணி தானாகவே இழக்க நேரிடும்.
சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிப்பது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Comments
Post a Comment