John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது?
John Cena ஓய்வு பெற்றார்: ரசிகர்கள் கண்ணீருடன் பிரியாவிடை; கடைசி போட்டியில் என்ன நடந்தது?
Picture of Editor
By Editor
Published On: December 14, 2025
Follow Us
Telegram
Join Our WhatsApp Channel
பிரபல மல்யுத்த வீரர் John Cena தனது கடைசி போட்டியில் விளையாடி WWE வளையத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
WWE தொடரில் “முடிசூடா மன்னன்” என ரசிகர்களால் போற்றப்பட்ட ஜான் சீனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர்.
இதுவரை WWE வரலாற்றில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதுடன், யு.எஸ். சாம்பியன் பட்டத்தை ஐந்து முறையும், இன்டர் கான்டினென்டல் பட்டத்தை ஒருமுறையும், டாக் டீம் பட்டத்தை நான்கு முறையும், ராயல் ரம்பிள் தொடரை இருமுறையும் வென்றுள்ளார்.
தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட 726 போட்டிகளில் பங்கேற்றுள்ள ஜான் சீனா, WWE-யின் மாதாந்திர PLE நிகழ்வுகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் The Undertakerக்கு அடுத்ததாக அதிக PLE வெற்றிகள் பெற்ற வீரராகவும் விளங்குகிறார்.
2002 ஜூன் 27-ஆம் தேதி WWE வளையத்தில் முதன்முறையாக அறிமுகமான அவர், தனது இறுதி போட்டியாக ‘Saturday Night Main Event’ தொடரில் வாஷிங்டனில் களமிறங்கினார். சுமார் 19,000 ரசிகர்கள் அரங்கில் திரண்டு “Thank You Cena” என முழக்கமிட்டு பிரியாவிடை அளித்தனர்.
இறுதி ஆட்டத்தில் ஜான் சீனா, Guntherஐ எதிர்கொண்டார். வழக்கமான ஆக்ரோஷமும் அனுபவமும் வெளிப்பட்டாலும், முடிவில் கண்டர் தனது சிறப்பு சப்மிஷன் மூவ் மூலம் ஜான் சீனாவை ‘டாப் அவுட்’ செய்ய வைத்தார். இதனால் ஜான் சீனா கடைசி போட்டியில் தோல்வியை தழுவினார்; இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு
ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு! பின்னணி என்ன?
போட்டி முடிவில் ஜான் சீனாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் CM Punk மற்றும் Cody Rhodes தங்களின் சாம்பியன் பெல்ட்களை வழங்கி வழியனுப்பினர். பல சக வீரர்களும் நேரில் வந்து மரியாதை செலுத்த, ஜான் சீனா கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வளையத்திலிருந்து விடைபெற்றார்.
மேலும் செய்திகள்
ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு
ஹர்திக் பாண்டியா- கவுதம் கம்பீர் விவாத வீடியோ வெளியாகி பரபரப்பு! பின்னணி என்ன?
விராட் கோலி ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க திட்டமிடுகிறதா
விராட் கோலி, ரோகித் சர்மாவின் சம்பளத்தை குறைக்க பி.சி.சி.ஐ. திட்டமிடுகிறதா?
வரலாற்றிலேயே மோசமான ஸ்கோர்
வரலாற்றிலேயே மோசமான ஸ்கோர்! இந்தியாவிடம் அடி வாங்கிய தென்னாப்பிரிக்கா – 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
விராட் கோலி
விராட் கோலி, விசாகப்பட்டினம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சாமி தரிசனம்
ஜெய்ஸ்வால்
“அணியில் இடம் பெறுவது தேர்வுக்குழுவின் கையில் தான் உள்ளது” – ஜெய்ஸ்வால் அதிரடி கருத்து
Powered By Infox Cloud⚡

Comments
Post a Comment