அன்பும் பெருமிதமும் நிறைந்த பாராட்டு உரை!

 

இன்று நமது கல்ஹின்னை அல்-பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த கித்தாபு பிரிவு, ஹிப்ழு பிரிவு மற்றும் பழைய மாணவர்களுக்கிடையேயான நிகழ்வு, நம் சமூகத்தின் அறிவுப் பரிமாற்றமும், ஒற்றுமையும், மரபு காக்கும் முயற்சியும் என்று தெளிவாகும் ஒரு முத்தான நிகழ்வாக அமைந்தது.  

மாணவர்களின் ஆர்வமும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பும் இந்நிகழ்வை அருமையாக்கியது. அல்ஹம்துலில்லாஹ்.

நமது ஊருக்கே பெருமை சேர்த்த இந்த முயற்சிக்காக, ஈடுபாட்டுடன் செயல்பட்ட கல்ஹின்னை ஜமியத்துல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின்  கௌரவ தலைவர் அல்-ஹாஜ் ரஸான் (மௌலவி) உபா-தலைவர் ரிஸான் (மௌலவி) மற்றும் மார்க்க கல்வியை கற்பித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் உலமாக்கள் மற்றும் நிர்வாகப்பணிகளைப் மிகப்பொருப்புடன் செய்து தந்து கொண்டிருக்கும் அல்-ஹாஜ் நளீம் அல்-ஹாஜ் ரிப்கான் (ஹாபிஸ்) மற்றும்   ஏற்பாட்டாளர்களுக்கு  - ஆசிரியர்களுக்கு  - மாணவர்களுக்கு   ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்  

இதேபோல் தொடர்ந்த التعليمي (கல்வி) முயற்சிகள் பலவும் வேரூன்ற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

அல்லாஹ் இதனை ஏற்று, அனைவருக்கும் உன்னத வெற்றிகளைத் தர வாழ்த்துகிறோம். 

🌙 கல்ஹின்னை ஜமியத்துல் பத்தாஹா அரபுக் கலாபீடம் 🌙  "திகட்டாத தேன் போல ஹிப்ழு மாணவர்கள் – ஒரு மறக்கமுடியாத தருணம்!"இன்றைய நிகழ்வு, நம் மார்க்கக் கல்வியின் இனிமையை உறவுகளின் நெஞ்சில் பதித்த ஒரு இனிய நாள்! ஹிப்ழு பிரிவு மாணவர்கள் தங்கள் முழுமனதுடனும், அழுத்தமான அர்பணிப்புடனும் உருக்கமான முறையில் குர்ஆன் ஓதிய தருணங்களில், திகட்டாத தேன் போல ஆனந்தம் மனங்களை நனைத்தது.

அந்த இனிமையை உணர்ந்தும், பாராட்டியும், மாணவர்களின் பெற்றோர்,உறவினர்கள், மற்றும் சகமக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு நிகழ்வை பிரகாசமாக்கினார்கள்.

இது ஒரு கல்வி நிகழ்வை தாண்டி, ஊர் ஒற்றுமையும், மார்க்க உறுதிமையும் வெளிப்பட்ட நாளாக அமைந்தது.

🌟 இந்த மாணவர்கள் அனைவரும் நம் சமுதாயத்தின் மார்க்கத் தூண்களாக மிளிரட்டும்!

அல்ஹம்துலில்லாஹ்!






Comments

Popular posts from this blog

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!