காஸா மக்களுக்கு ஆதரவாக பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்தது – பாரிய அளவிலான நாட்டு மக்கள் களத்தில்


WORLD NEWS ALERT

காஸா மக்களுக்கு ஆதரவாக பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்தது – பாரிய அளவிலான நாட்டு மக்கள் களத்தில்


காஸா மக்களுக்கு ஆதரவாக பலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம் வெடித்துள்ளது.



இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று (22) நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியிலும் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


காஸா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்து வருகின்றன.


இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராக இத்தாலி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காஸா போரை நிறுத்துவது, பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இத்தாலியின் மிலனில் ரயில் நிலையமொன்றின்ன  மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும்  நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் கோஷமிட்டு கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்

Galhinna TVNews updated 


Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!