இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

- செப். 14இல் இரு அணிகளுக்கிடையே மோதல்

September 12, 2025 

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கிண்ண போட்டியை இரத்துச் செய்யக் கோரிய இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை, ஓர் அவசர வழக்காக எடுத்துக் கொள்வது நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் நால்வரே இந்த வழக்கை தொடுத்திருந்தனர். அந்த மனுவில், நாட்டு நலனை விட கிரிக்கெட்டை மேலானதாக நினைக்கக்கூடாது என சட்டக்கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். மேலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவது எதிர்மறையான கருத்தை பிரதிபலிக்கும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறட்டும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆசிய கிண்ணத் தொடரில் ஒரே குழுவில் இடம்பெற்றிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி துபாயில் மோதவுள்ளன.  ஆசிய கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி உட்பட அதிகபட்சம் 3 முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Galhinna TVNews updated 



Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!