உலக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஷிப்; பாகிஸ்தான் பங்கேற்காது..!

 

உலக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஷிப்; பாகிஸ்தான் பங்கேற்காது..!

“உலக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஷிப் தொடரில் இனிவரும் காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது” என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த சனிக்கிழமை நிறைவுக்கு வந்த உலக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.

இதில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 196 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா, 16.5 ஓவரிலேயே 197 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – இந்தியா மோத இருந்தன. ஆனால், லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்த இந்திய அணி அரையிறுதியிலும் விளையாடாமல் விலகியது. இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதியில் விளையாடாமல் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்கள் அணி இனி உலக லெஜெண்ட்ஸ் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. மேலும் லீக்கில் விளையாட மறுத்த இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் புள்ளிகளை பிரித்து வழங்கி பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் 

சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

Galhinna TVNews updated 

Continue Reading

Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!