5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர் - 2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டு மேலதிக விபரம் 1ஆவது கொமண்டில்...

 5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர்

-  2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டு


பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர் கர்டிஸ் காம்பர்

July 11, 2025 2:11 pm 0 comment

அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பர் 44 ஓட்டங்களையும், பீட்டர் மூர் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களை எடுத்திருந்தது. 12ஆவது ஓவரை கர்டிஸ் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மீண்டும் 14ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021இல் நெதர்லாந்துக்கு எதிராக T20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Galhinna TVNews 

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕ X 👉 x.com/ThinakaranLK
⭕ Telegram 👉 t.me/ThinakaranLK

மேலும் செய்திகள்...

Leave a Comment

Home » விண்வெளி நிலையத்தில் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுபான்ஷு சுக்லா

விண்வெளி நிலையத்தில் விருந்து கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுபான்ஷு சுக்லா

July 11, 2025 1:21 pm 0 comment

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாள் பயணமாகச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஜூலை 14ஆம் திகதி பூமிக்கு திரும்பும் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் விண்வெளியிலிருந்து வீடு திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரும் மற்ற குழு உறுப்பினர்களும் விருந்தில் கலந்துகொண்டனர்.

இதன் புகைப்படங்களை சுற்றுப்பாதை ஆய்வகத்திலிருந்து மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்ட படங்களில், சுக்லாவும் அவரது சகாக்களும் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காரணமாக ஆய்வகத்திற்கு மிதந்தபடி செல்வது, புன்னகை மலர அனைவரும் உணவை ரசிப்பது போன்றவற்றை புகைப்படங்களில் காண முடிகிறது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

 
 
CLIC



Comments

Popular posts from this blog

கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து

Bus drivers are urging the public to

கண்டி அல்தெனிய, பரிகம