கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

 

கம்சட்காவில் 10-13 அடி உயர சுனாமி அலைகள்; மக்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!

29
SHARES

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், பசுபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான், ஹவாய் மற்றும் அமெரிக்க மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மக்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கம்சட்காவில் 3-4 மீட்டர் (10-13 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும், வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒரு நகரத்தை 30 செ.மீ (12 அங்குலம்) அலைகள் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுனாமி எச்சரிக்கைகள் குறித்து அமெரிக்கர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கம்சட்காவில் நிலநடுக்கத்தினால் பலர் காயமடைந்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவாம், பெரு மற்றும் ஈக்வடார் கடற்கரையில் உள்ள கலாபகோஸ் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில், 2011 ஆம் ஆண்டில் நவீன வரலாற்றில் இரண்டு மிக மோசமான அணு விபத்துகளில் ஒன்றான புகுஷிமாவில் (கிழக்கு ஜப்பான்) சேதமடைந்த அணுமின் நிலையத்தின் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதாக, டெப்கோ, ஆபரேட்டர் தெரிவித்துள்ளது.

Image

Comments

Popular posts from this blog

கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து

Bus drivers are urging the public to

கண்டி அல்தெனிய, பரிகம