மருத்துவமனையை ஈரான் தாக்கியது போர் குற்றம் எனவும் எல்லை மீறிய செயல் எனவும் இஸ்ரேல் தெரிவி
மருத்துவமனையை ஈரான் தாக்கியது போர் குற்றம் எனவும் எல்லை மீறிய செயல் எனவும் இஸ்ரேல் தெரிவிப்பு

இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பீர்ஷெவாவில் அமைந்துள்ள சொரோகா மருத்துவமனையை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியது ஒரு முக்கியமான எல்லையை மீறிய செயல் என இஸ்ரேல் சுகாதார அமைச்சர் யூரியல் புசோ தெரிவித்தார்.
“இது ஈரான் அரசால் செய்யப்பட்ட போர் குற்றமாகும்,” என புசோ இஸ்ரேல் இராணுவ வானொலியில் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.
ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சேதம் ஏற்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் காயம். காயமடைந்தவர்களில் இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர் ஷேவா நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை மற்றும் தெல் அவிவ் நகரில் ஈரானின் ஏவுகணைகள் தாக்கியதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
மருத்துவமனைக்கு ஏற்பட்ட பாதிப்பு நேரடி ஏவுகணைத் தாக்குதலால் அல்ல, மாறாக வெடிப்பின் அதிர்வலைகளால் ஏற்பட்டது என தெரிவிக்கபடுகிறது. . இது, மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒரு “முக்கியமான” இலக்கைத் தாக்கியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் கூறியவற்றை உறுதிப்படுத்துகிறது.
இஸ்ரேலின் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர், மருத்துவமனையில் இருந்து ஆபத்தான பொருட்கள் கசிவு இல்லை என்று உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும், டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பங்குச் சந்தை கட்டடமும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டது.


Comments
Post a Comment