முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

 முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!



   

         *`29/05/2025`*


2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் *மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு* 10 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும், நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

 *சதொச* நிறுவனத்தினூடாக 14,000 கரம் போர்ட்கள் மற்றும் 11,000 தாம் போர்ட்கள் இறக்குமதி செய்ததன் ஊடாக, அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அறியமுடிகின்றது.


   Galhinna TVNews 

Comments

Popular posts from this blog

கொத்மலை #பகுதியில் #மீண்டும் #ஒரு #கோர #விபத்து

Bus drivers are urging the public to

கண்டி அல்தெனிய, பரிகம