மற்றுமொரு பேருந்து விபத்து நால்வர் காயம்

 

May 14, 2025

மற்றுமொரு பேருந்து விபத்து  நால்வர் காயம்



நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக வலப்பனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்த விபத்து, நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் செவ்வாய்க்கிழமை  (13) மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு  சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த போது, ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து வீதியின் இடதுபுறமுள்ள  மலையில் மோதியுள்ளது.


இந்த விபத்து ஏற்பட்ட இடம்  செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த இடமாக காணப்படுவதால், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாக  உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.


விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 



Comments

Popular posts from this blog

நவீனமயப்படும் கண்டி கண்டியில் நவீன ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் 2028-ல் திறக்கப்படவுள்ளது

முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி சிறுமி டிப்பரில் மோதியதில் உயிரிழப்பு.! Video குறித்த முச்சக்கர வண்டியில் 8 முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையான விபரங்கள் - 5/

கிரிக்கெட்டின் ஆன்மாவைச் சிதைக்கிறதா ICC?" – கொதித்தெழுந்த அஃப்ரிடி!