தன்னுயிர் விடுத்து ... தன் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாய்.
தன்னுயிர் விடுத்து ... தன் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாய்.
கொத்மலை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்த செய்தி முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் விபத்தில் தனது குழந்தையை பாதுகாத்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை நலமாக உள்ளதாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோர பேருந்து விபத்து : அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி தீர்மானம்*
கொத்மலை (Kotmale) ரம்பொடை (Ramboda) - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் வைத்து அரச பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (11.05.2025) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
பலரும்ந்த கோர பேருந்து விபத்தில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பலன் பெற தகவல்களை Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*
#today #srilanka #bus #accident
Comments
Post a Comment